சிவசித்தனின் பிரபஞ்சக் குருகுலம் தொடக்கம்

 

சிவசித்தனின் செவ்வானப் பிரபஞ்சக்கலை

 

சிவசித்தனின் செவ்வானப் பிரபஞ்சக்கலை மதுரை சிந்தாமணி சிற்றூரில், சிவகுரு சிவசித்தன் அவர்கள் சுயம்பாய், இக்கலையினை மனிதன் வாழ்விற்கு தேவையான அடிப்படை தகவல்களை   படைத்து செயல்முறைகளாய் செய்ய முதலில் கற்றுக் கொடுத்து வருகிறார்.

  சிவசித்தன் தான் உணர்ந்த இந்த நோயற்ற வாழ்வுதனை, பிறப்பின் உன்னதத்தை உணர்ந்தார் போல் சிவசித்தனை நாடி வருகை புரிபவர்களும் அறிவை அறிவால் அறிந்து கற்க வேண்டும் என்ற நோக்கில் சிவசித்தன் அவர்கள் மக்கள் குறைகளை போக்கி நல்வழி காட்டி உணர்த்துகிறார்.

     இங்கு வருபவர்களுக்கு சிவசித்தன் நாடி பிடித்து பார்த்து அவர்கள் உடற் குறைகளை நாடி மூலம்  அறிந்து நம்முள் உள்ள  உடல் தொந்தரவுகளை கூறி பயிற்சி மூலம் சமநிலைபடுத்துகிறார். 

     

    ஸ்ரீவில்வம் வாசி யோக மையம் 26-6-1996 அன்று துவங்கப்பட்டது. சிவகுரு சிவசித்தன், தான் சுயம்பாய் உருவாக்கிய வாசி யோகக் கலையினை, தனக்கு அதனால் கிடைத்த ஆற்றல்கள் போன்றவற்றை, தான் உணர்ந்தது போல மக்கள் அனைவரும் உணர்ந்து வலியின்றி, வாழ வேண்டும் என்று எண்ணினார்.

 

0012vilvam (1) 200220121938

அதன் காரணமாக பலருக்கு தன் கலையினை கற்றுத் தர எண்ணினார், எனினும் மக்கள் இக்கலையினை புரிந்து கொண்டு, வாசியோகப் பயிற்சிகளின் அவசியத்தை அறிந்து அவர்களும் பயன்பெற்று, பிறருக்கும் இக்கலையின் இருப்பிடம் மதுரை சிந்தாமணி ஸ்ரீவில்வம் வாசி யோக மையமே என்று உறுதி செய்தார் இத்தலத்தை.

 

Leave a Reply