சிவசித்தனின் பக்தர்

சிவகுரு சிவசித்தன் அருளுடன்,

Pitchai kani Sivasithan1

சிவகுரு சிவசித்தன் மீது அதீத பக்தியும் அன்பும் கொண்ட திரு.பிச்சைக்கனி அய்யா(எனக்கு மாமா) அவர்கள் என்னிடம், சிவகுருவைப் பற்றியும், சிவசித்தனின் வில்வ வாசிதேக குருகுலம் பற்றியும் பகிர்ந்த சில விஷயங்கள், மற்றும் அவருக்கு சிவகுருவின் மீது இருந்த பக்தியின் வெளிப்பாட்டினால் அவர் எதுவும் நிரந்தரமில்லை என்பதை உணர்ந்து, “அனைத்தையும் விட்டுவிட்டு சிவகுருவே அனைத்தும் என சரணாகதி அடைந்தது பற்றிய சில வரிகள்.

Pitchai kani Sivasithan5

திரு.பிச்சைக்கனி அய்யா அவர்கள் இந்து சமய அறநிலையத் துறையில் நிர்வாக அதிகாரியாக தமிழகத்தின் பல்வேறு சிறப்பு மிக்க கோயில்களில் பணியாற்றியவர். தன்னுடைய பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், தனக்கு உடலில் இருந்த இருதயக் குழாய்களில் அடைப்பு, ஹிரண்யா, கண்பார்வை குறைபாடு, நுகரும் தன்மை இல்லாதது போன்ற பிரச்சனைகளுக்காக தனது நெருங்கிய உறவினர் மூலமாக ஸ்ரீவில்வம் வாசியோக குருகுலம் வந்து சிவகுரு சிவசித்தனிடம் வாசியோகப் பயிற்சிகள் கற்றார்.

Pitchai kani Sivasithan1௦

தமது உடலில் நோய்கள் குணமாவதை கண்டு, தம்முள் ஒரு சுறுசுறுப்பு இயங்குவதை எப்போதும் உணர்ந்து உரைக்கலானார். திரு.பிச்சைக்கனி அய்யா எப்பொழுதும் சிவகுருவின் சிந்தனை கொண்டே செயல்களை செய்வார். யாருக்காவது உடலுக்கு சிறிய பிரச்சனை என்றால் கூட, பயிற்சிகளில் இல்லாதவராய் இருந்தாலும் அவர்களை அழைத்து பொறுமையாய், பக்குவமாய் சிவகுரு சிவசித்தன் பற்றியும், சிவகுரு சிவசித்தனின் வாசியோகம் பற்றியும் விளக்கமாக, நம்பிக்கையூட்டும் விதமாக, அன்போடும், அக்கறையோடும் எடுத்துக் கூறுவார்.

Pitchai kani Sivasithan2

எனக்கும் எங்கள் குடும்பத்தினருக்கும் சிவகுருவைப் பற்றியும், ஸ்ரீவில்வம் வாசியோக குருகுலம் குறித்தும் எந்த ஒரு

சலனமோ அல்லது தயக்கமோ இல்லாமல் பயிற்சிகளில் சேரும் விதமாக எடுத்துரைத்து, நோய்கள் பற்றிய கவலையே இனி உங்களுக்கு வேண்டாம், அனைத்தும் சிவகுரு சிவசித்தன் பார்த்துக் கொள்வார் என்று நம்பிக்கை அளித்தது அவரே. நான் வாசியோகப் பயிற்சிகளில் சேர்வதற்கு சில நாட்கள் முன்பு அவரிடம் பேசிட நேர்ந்தது, அப்போது அவர் உனக்கு சிவகுரு சிவசித்தனின் வாசியோகப் பயிற்சிக்கு சரியான இடைவெளியில் வர இயலவில்லை என்று வருந்தக் கூடாது, எச்செயல் புரிந்தாலும் நம்மோடு எப்போதும் சிவகுரு இருக்கிறார் என்று எண்ணியே செய்திடு, அவரோடு நாம் எப்போதும் இருக்கலாம். அவர் சாதாரண மனிதன் கிடையாது, கடவுளும் கிடையாது யாரும் கிடையாது, நீயே புரிந்துகொள்வாய், தைரியமாக வா என்றார்.

Pitchai kani Sivasithan3

நான் வாசியோகப் பயிற்சிகளில் சிவகுரு சிவசித்தனிடம் சேர்ந்த பிறகு, ஒவ்வொரு முறையும் சிவகுருவின் அற்புதங்கள் பற்றி சிலாகித்து கண்கள் பணிக்க விளக்குவார். யார் என்றே தெரியாத மனிதர்களை சிவகுரு அலைபேசியில் பேசியே குணமாக்குவதை பிச்சைக்கனி அய்யா குரலில் கேட்பதற்கே நெகிழ்ச்சியாக இருக்கும். அப்போது சிலர் சொல்வார்கள், இவர் மட்டும் தான் சிவகுருவைப் புரிந்து கொண்டதுபோல பேசுகிறார் என்று. எனக்கு அப்போது ஒன்று மட்டும் புலப்பட்டது, பிச்சைகனி அய்யா தனக்கும் சிவகுருவிற்கும் மட்டுமே அதீத புரிதல் உள்ளது என்பதை வெளிபடுத்த வில்லை, அவர் சிவகுருவின் மீது வைத்துள்ள அதீத அன்பின் வெளிப்பாடு அது, அதனைப் பிறர் இவ்வாறு பேசுவது அவர்களின் புரிதலே.

 

உண்மையான சேவை என்பது, அவர் சிவகுருவிடம் தன் குடும்பம், குழந்தைகள் என தனிப்பட்டு ஆயிரம் பேசினாலும், ஒரு சேவையாளராக, ஒரு பயிற்சியாளராக எனக்குத் தெரிந்து அவர் வேலை(அனைத்தும் மிகப் பெரிய பழமையான ஆலயங்கள்) செய்த எந்த ஒரு இடத்தைப் பற்றியும், எடுத்துக்காடிற்கு கூட தற்பெருமை பேசிடாத தகைமை அவர். அத்தகைய குணம் இருந்ததால் தான் அவர் திருவாய் மலர்ந்த அனைத்து சொற்களும் சிவகுரு, சிவகுரு, சிவகுரு மட்டுமே.

 

எதிர்பார்ப்புகள் இல்லாமல் ஸ்ரீவில்வம் வாசியோக குருகுலத்தில் இருந்தால் தான் சிவகுருவோடு என்றும் நிலைத்திருக்க முடியும் என்பதை எனக்கு எப்போதும் வலியுறுத்திக் கொண்டே இருப்பார். அவரிடம் நான் கற்றுக் கொண்ட மிகப்பெரிய விஷயம், சிவகுரு யாருடன் பேசிக்கொண்டிருந்தாலும், எவ்வளவு நேரம் ஆனாலும் பொறுமையாய் காத்திருந்து நாம் சிவகுருவிடம் தெரிவிக்க வேண்டியதை கண்டிப்பாக தெரிவித்தல் வேண்டும் என்பதை எப்போதும் வலியுறுத்துவார். அப்படி செய்யாத காரணத்தால் தான் பலரும் சிவகுருவை விட்டு விலகுவதை கூறி வருந்துவார்.

Pitchai kani Sivasithan9

பித்சைக்கனி அய்யா கொண்ட மிகப் பெரிய வருத்தம், பயிற்சியாளர்கள், சேவையாளர்கள் தங்கள் கருத்துகளை சிவகுருவிடம் வலியுறுத்துகிறார்கள், அவர்களை முன்னிலைப் படுத்தல் வேண்டும் என்று எதிர்பார்கிறார்கள், அது கிடைக்காத போது, அவர்கள் உணவில் பயிற்சியில் செய்யும் தவறுகளால் விலகிவிடுகிறார்கள், அவர்களுக்குத் சிவகுருவின் அற்புதங்களைத் தெரிந்து கொள்ள முயற்சியும் இல்லை, பொறுமையும் இல்லை என்று ஆதங்கப் படுவார். அப்போதும் அவர்கள் திருந்தி, மீண்டும் தங்கள் உடல்நிலை பேண வேண்டும் என்று எண்ணுவார்.

 

சிவகுரு சிவசித்தன் அவர்களோடு, பிச்சைக்கனி அய்யா சில இடங்கள் குறிப்பாக சதுரகிரி சென்று வந்த அனுபவத்தை பகிர்கையில், நான் வியந்த ஒரு விஷயம், அவர் இறைவன் என்று எதனைப் பற்றியும் பேசவில்லை. சிவகுரு மூச்சி வாங்காமல் ஏற வைத்தார். சுறுசுறுப்பாக மலைஏறி இறங்கினேன். சுவாசத்தில் புத்துணர்ச்சி உணர்ந்தேன். வயது மறந்தேன், சிவகுருவின் சொற்பொழிவுகள் ஒவ்வொன்னும் பிறவிப் பயன் காட்டின, சிவகுருவின் கையைப் பிடித்து நடந்தேன், அப்போது அவர் குரு என்று அழைப்பார் — குரு,குரு,குரு என்பதை தவிர்த்து அவர் வேறு எதுவும் பேசவில்லை.

Pitchai kani Sivasithan7

அதே போல பிச்சைகனி அய்யா சிவகுருவை பெருநெருப்புத்தூணாய், ஜோதி வடிவான லிங்க ரூபத்தில் காட்சியில் கண்டதை ஒருமுறை விளக்கினார். அவர் திருவண்ணாமலையில், தான் பணியாற்றிய ஸ்தலத்தில், சிவகுருவை திருமணக் கோலத்தில் பார்த்திட எண்ணி, தான் ஒளிவெள்ளமாய் சிவகுருவை கண்ட இடத்திலேயே மீண்டும் சிவகுரு சிவசித்தனுக்கும் அவரது துணைவியாருக்கும் திருமணம் நடத்தி கண்குளிரப் பார்த்தார். அதனை பிச்சைக்கனி அய்யா அவர்களின் புதல்வர்கள் கூட இன்றும் கூறுகின்றனர், எங்களுக்கு கூட அப்பா வேலைபார்த்த பெருமை வாய்ந்த கோயில்களில் திருமணம் நடத்திப் பார்க்கவில்லை, அப்பாக்கு குரு தான் “முதல்” என்று.

 

ஸ்ரீவில்வம் வாசியோக குருகுலம் வருவதற்கு பலரும் அதிகாலையில் தயங்கும் காலத்தில் லட்சுமிபுரம் துவங்கி மஹால் வரையில் தினமும் நடந்தே வந்து அங்கிருந்து பேருந்தில் இருவேளையும் சிந்தாமணி வந்திடுவார். உண்மையில் எனக்கு வழிகாட்டி, தயக்கம் போக்கியவர், குருவின் அருகாமையின் முக்கியத்துவம், பிற வேலைகள் அனைத்தையும் விட சிவகுருவின் இடம் நாடி செல்லுதலே உன்னதம் என்பதை அவரிடமே கற்றேன்.

 

சிவகுருவிடம் எதையும் மறைத்தல் கூடாது, தயக்கம் கூடாது, அவர் கஷ்டப்படுவார் என்று எண்ணக்கூடாது, அவர் பெருங்கடல் நாம் அனைத்தையும் சொல்லிவிட வேண்டும், அப்போது தான் நாம் உடலும், மனமும் லேசாகி கடலில் அமைதியான இடத்துல் அவரிடம் நிலைக்க முடியும் என்று எப்போதும் கூறுவார்.

Pitchai kani Sivasithan6

பிச்சைகனி  அய்யா இறப்பதற்கு சில நாட்கள் முன்னால் அவரை சந்திக்க நேர்ந்தது, அப்போது என்கையைப் பிடித்து என்னஆனாலும் சிவகுரு சிவசித்தன் விட்டு பிரியமாட்டேன்னு சத்யம் பண்ணிக்கொடுன்னு சொன்னாரு. நான் இப்போ நல்லா இருக்கேன், நான் எதுக்கு பிரிய போறேன். நான் எப்பவும் பயிற்சிக்குப் போவேன்னு சொன்னேன். சிவகுரு பக்கத்துல இருக்குற எல்லாரும் அவரிடம் எதையோ எதிர்பார்கிறாங்க, அவர்கிட்ட கத்துகிட்டு வெளிய போய் சொல்லி கொடுக்கணும்னு நினைக்குறாங்க, சிவகுரு பொறுமையா இருக்கார்.

 

நான் சேர்த்துவிட்ட என்கண்மணிகள் நீங்க என்னிக்கும் என்பேருக்கு களங்கம் வரும்படியாவோ, அல்லது சிவகுரு பேச்சைக் கேக்காம ஏதாவது தப்போ பண்ணினால் என்னை மறந்திடுங்கன்னு கண்கலங்கினார். சிவகுருவைத் தவிர யாருக்கும் நாடி சரியாக கணிக்க இயலாது, அதே மாதிரி சிவகுருவின் ஆற்றல் நெருப்பு போன்றதுன்னு என்உடம்பில் உணரத்துவங்கிய நாட்கள் அவை என்பதால், நான் இயல்பா ஒன்னும் நினைக்காதீங்க, சிவகுருவோடு வெப்பம் பக்கத்துல யாரும் நிக்க கூட முடியாது. நாங்க எப்பவும் எங்கிருந்தாலும் உங்களோடையும், சிவகுருவோடையும் இருப்போம்னு சொன்னதும் சரி டா. சந்தோஷம் அப்படின்னார். அதுவே அவர் என்னிடம் இறுதியாக ஸ்ரீவில்வம் வாசியோக குருகுலத்தின் வாசலில் வைத்து பேசியது.

DSC07323

அதற்கடுத்த வாரத்தில் அவர் இறந்துவிட்டார். ஏன் என்ன என்று ஒன்றும் புரியவில்லை. நாங்கள் அங்கு சென்ற பொழுது, அவருடைய துணைவியார், குழந்தைகளை அவங்கவங்க இடத்துக்கு அனுப்பிட்டு வந்து அமைதியா நெஞ்சைப் பிடிச்சிட்டு உக்காந்திட்டார், கடைசி வரைக்கும் அலைபேசியில் உத்தரவு குடுங்க குருன்னு சிவகுருகிட்ட பேசினார்ன்னு, சொல்லி அழுதாங்க. அவருடைய குழந்தைகள் எங்ககிட்ட முன்னமே ஒரு வார்த்தை சொல்லியிருந்தா நாங்க மருத்துவ மனையில் சேர்த்து அப்பாவைக் காப்பாத்திருப்போம்னு சொன்னாங்க.

புரிதல் என்பது எங்கோ குறைந்துள்ளத்தை உணர்ந்தேன், விடை என்றாவது கிடைக்கும் என்று காத்திருந்தேன். பிச்சைகனி அய்யாவின் இறப்பு எங்களுக்கு ஒருவகையான வருத்தம், அவர் குடும்பத்திற்கு ஒருவகையான வருத்தம், சிவகுருவிற்கு கண்டிப்பாக அது ஒருவித அன்பின் இழப்பே. ஆனால் அதனையும் இந்த சமுதாயம் விளையாட்டாய் கையில் எடுத்து சுய விளம்பரத்திற்குப் பயன் படுத்தியது.

DSC07913

நோய் முற்றிப்போய் சிவகுரு சிவசித்தனிடம் பயிற்சிக்கு வருவோர் சிலர், வலியில்லா இறப்பு வேண்டி வருவர், உறவுகள் கைவிட்ட சிலர், மருத்துவமனைகள் கைவிட்ட பலரையும் ஏற்று சிவகுரு சிவசித்தன் அவர்களை சரி செய்து வரும் வேளையில் உணவில் தவறுகள், சுற்றத்தார் சொல் கேட்டு உயிர் தொலைக்கும் அத்தனை பேரின் பேச்சுகளையும் தன்னுள் வாங்கி எரித்திடுவார் சிவகுரு. இருந்தும் ஓயாத அலையாய் பிச்சைகனி அய்யா பற்றியும் பலரும் கேள்விகளாய், சீண்டல் பேச்சுகள், சிவகுருவின் விதிமுறைகள் ஏற்காமல் வெளியேறியோர், சிவகுருவிடம் எதையோ எதிர்பார்த்து வெளியேறியோர், சிவகுருவைத் தவறாகப் பேசி வெளியேறியோர் என அவர்களுக்கு பிச்சைக்கனி அய்யா போன்ற ஒருவரின் இறப்பு விளையாட்டாய் போனது எனக்கு மிகுந்த வருத்தம் அளித்தது. சிவகுருவிடம் பேசினால் இயற்கை தானாய் பதில் சொல்லும் என்பார்.

DSC07920

இயற்கை பதில் சொன்னது பிச்சைக்கனி அய்யா அவர்களின் துணைவியாரின் வாயிலிருந்தே. சிவகுரு சிவசித்தன் நம்முள் என்றும் நிறைந்திருந்து செயலாக்குகிறார் என்பதை முழுமையாய் உணர்ந்தேன். சின்னமனூர் சென்றிருந்தேன். எந்த ஊருக்கு சென்றாலும் சிவகுருவிடம் சொல்லாமல் சென்றது கிடையாது. அன்றும் சொல்லிவிட்டே சென்றேன், திரும்பி வரும்போது சிவசித்தனின் மனிதகுலம் புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தேன், பிச்சைக்கனி அய்யா அவர்களின் துணைவியார் கூறினார் உங்கள் மாமாவைப்(பிச்சைக்கனி) போல உங்களுக்கும் எல்லாமே குரு தானா என்று. ஆமாம் அத்தை என்றேன். அவர் பிச்சைகனி மாமாவை சில வருடங்களாய் தவிர்த்ததாகவும் அதனால் அவர் மனமுடைந்தே இறப்பு தேடினார் என்பதையும் என்னிடம் கூறினார். உன்னிடம் எதையும் மறைக்கப் பிடிக்கவில்லை. எங்களுள் இல்லறம் சார்ந்த புரிதலில் அனுசரிப்பு என்பக்கத்தில் இல்லை என்று ஒத்துக்கொண்டார்.

 

அவர் கூறினார், பிச்சைகனி அய்யா இறுதிவரை அவருடைய தனி மனித செயல்களுக்கு(பணம், பொருள், குடும்பம்) மனைவி வழி சார்ந்த செயல்களை தவிர்த்தார். மேலும் குழந்தைகளை நல்ல முறையிலும் கண்டிபோடும் வளர்த்துள்ளார், கணவன் மனைவி பரஸ்பர புரிதலில் மனைவியானவள் சிறிது பணிந்து நடந்திருந்தால் கண்டிப்பாக அவர்களுள் இருந்த தவிப்பும், தவிர்ப்பும் நீங்கியிருக்கும், என்பதை தானே ஒத்துக்கொண்டார் அவரது துணைவியார். துணைவி தன்னை தவிர்க்கிறார் என்பது ஒருபுறம், தான் பெரிதும் மதிக்கும் சிவகுருவை ஒருவரும் முழுமையாய் புரிந்து கொள்ள விழைய வில்லை என்ற ஆதங்கம் ஒருபுறம், அவரையும் தங்கள் செயல்களுக்கு உடந்தையாக சிவகுருவிடம் சூட்சுமங்கள் அறிந்திட பயன்படுத்த எண்ணுகிறார்களே என்ற ஆதங்கம், ஏற்கனவே இருதயம் பலவீனமாகி அப்போது தான் சீராகி வரும் வேளையில், தனக்கென்று எதுவும் கேளாமல் சிவகுருவிடம், குடும்பத்தினருக்கென்று சில கோரிக்கைகள் வைத்து சென்றிட்டார். உறவுகள் எனும் எதிர்பார்ப்பு வளையம் விட்டு அவர் சுயமாய் சேவை செய்து வந்ததை உறவுகளும் புரிந்து கொள்ள விழையாதது ஒரு வருத்தமாய் இருப்பினும், இன்று வரை நொடி தோறும் அவர் நினைவில் வாழ்கிறார்கள் அவர்கள்.

s1 (39)

அவர் செயலில் நன்னது தீது என்று பிரிப்பதை விட, அவர் தன்னைப் புரிந்து கொண்டே சிவகுருவை சரணடைந்தார். அவரை யாரும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கூட அவரிடம் இறுதியில் இல்லை. அதனால் தான் அவரால் இயல்பாய் சிவகுருவோடு இரண்டறக் கலந்தே இருக்கும் நிலை பெற முடிந்துள்ளது.

திரு.பிச்சைக்கனி அய்யா அவர்களுக்காக எழுதிய இக்கட்டுரை எனக்கும் உண்மையில் சிவகுருவின் சொற்களாய் செவியில் கேட்குது. எங்களை யாரும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கூட இனி வேண்டாம். சிவகுரு உணர்த்தும் ஒவ்வொரு தனிமனித ஆற்றலும், குடும்பத்தினை கண்டிப்பாக மாற்றும், சிவசித்தனின் மனிதகுலம் அத்தகு குடும்பங்கள் கொண்டதாய் நிறையும். தன்னலம் கருதாது அனைவருக்கும் நலம் அருளும் சிவகுரு சிவசித்தன் வழி நடக்கும் நாம் யாராக இருப்பினும் சிவகுரு அருள்வது ஏற்று பணி செய்தலும், சிவகுருவைப் பற்றியோ, நம்மைப் பற்றியோ, ஸ்ரீவில்வம் வாசியோக குருகுலம் குறித்தோ எது பேசினாலும், இயற்கை பதில் கூறும் வரை காத்திருப்போம். நம் பணி என்றும் சிவகுரு சிவசித்தன் அருளால் செம்மையாய் என்றும் நடைபெறும் என்று எண்ணம் ஏற்று செயலாவோம். நன்றி சிவகுரு.

SAM_0014

செ.லக்ஷ்மி ப்ரதிபா – செந்தில்குமார் ..

உசிலம்பட்டி

வில்வம் எண்- 1204306

Leave a Reply

  • சிவசித்தனின் கூற்று