சிவசித்தனின் திருநாமம்

சிவகுரு சிவசித்தன் திருநாமமே மெய் ஆற்றலே

 


 

வாசியோகப் பயிற்சிகளும் இறைமையும்


 

இறைமை என்றால் என்ன?

உலகம் முழுதும் மக்கள் ஒருவருக்கொருவர் பாகுபடுத்திப் பார்க்க   SSG - 1123தங்களுள் பிரித்துக் கொண்ட குழுக்களே சமயங்கள் எனலாம். மரபு என்பது உடல் சார்ந்ததா அல்லது தலைமை சார்ந்ததா என்று சிந்திக்க இயலாத நிலையில் மக்கள் இருக்கின்றனர். காரணம் எதையாவது பின்பற்றுகிறோம், அதுவே சிறந்தது, உண்மையானதும் கூட என்ற எண்ணம். சரி அந்த உண்மை மக்களுக்கு கற்றுக் கொடுத்த நியதிகள், மக்கள் நோயின்றி வாழ வழிகாட்டினவா? இல்லையேல் மக்கள் தங்கள் மதம் சார்ந்த, சமயம் சார்ந்த அனைத்து செயல்களையும் முறையாக தெரிந்து பின்பற்றுகிறார்களா? அல்லது அதற்கான காரணங்கள் முழுமையாய் தெரியுமா? அந்த காரணங்களால் என்ன பயன் அடைந்தார்கள்? இறைவன் எனும் சொல்லின் உண்மை பொருள் தலைவன், தம்முள்ளே தமையறிய வழிகாட்டும் ஒருவரே தலைவனாக இருக்க இயலும்.

 

கடவுள் கட-கழிவுகளைக் கடந்து உள்-உள்ளம் அறி.


 

சிவகுரு சிவசித்தன் உத்தரவு:

      சிவகுரு சிவசித்தனின் வாசியோகப் பயிற்சிகளைக் கற்றுக் கொண்டு, உடல் நலன் பெற வேண்டி, மதுரை சிந்தாமணி ஸ்ரீவில்வம் வாசியோக மையம் வரும் அனைவருக்கும் சிவகுரு சிவசித்தன் பல விதிமுறைகளை விதித்துள்ளார். அவற்றில் ஒன்று முறையாக, ஒருவருடம் முழுதும் தவறாமல் தினமும் வாசியோகப் பயிற்சிகள், உணவு முறைகள் மற்றும் விதிமுறைகள் பின்பற்றி, தேகநலம் காணும் வரை கோவில் செல்லக் கூடாது என்பதாகும்.

உடல் வலிகள், வேதனைகள் அதிகமாக இருக்கும் போது, பயிற்சிகளில் வந்து சேர்ந்து விடும் மக்கள், வலி குறைய ஆரம்பித்தவுடன், பழையபடி கோயில்களுக்கு செல்கிறேன் என்பார்கள். அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? சிவகுரு சிவசித்தன் உத்தரவு மீறும் செயலால் பாதிப்பு யாருக்கு?


கழிவுடல்கள் காணும் இறைமை இறைமையா?

வாசியோகப் பயிற்சிகள் பயில்வோர் உடற்கழிவுகள் நீங்காமல் கோயில்களுக்கு சென்றால் என்ன ஆகும்? (வாசியோகம் பழகாமல் தினமும் கோவில் செல்வோர் நிலையும் இதுவே)

உடலில் கழிவுகளோடு வேண்டப்படும் நலமானது கண்டிப்பாக உடல் நலம் சார்ந்ததாக இருக்கும். உடல் நலம் கிடைக்கும் ஒரே தலம், சிவகுரு சிவசித்தன் ஸ்ரீவில்வம் வாசியோக மையமே.

உடல் கழிவுகள், எண்ணங்களில் கழிவுகளை உற்பத்தி செய்து கொண்டே இருக்கும். அவற்றிலிருந்து யாரும் தப்பித்துக் கொள்ள இயலாது.

எண்ணங்கள் கழிவு கொண்டால், அந்த வேண்டுதல் கண்டிப்பாக எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். இது பலரும் இங்கு உணர்ந்து சொல்லும் உண்மை.

நன்றாக சிந்தித்துப் பாருங்கள், உங்கள் எண்ணங்களில் இறைவனை வழிபடும் போது, கண்டிப்பாக உங்களுக்கு வேண்டாத நபரைப் பற்றிய சிந்தனையும் மேலோங்க இருப்பீர்கள்.

அது தவறாகும், அந்த கோயிலில் உண்மையான ஆற்றல் இருப்பின், உங்கள் எண்ணத்தில் தவறு இருந்தால், அது உங்களை பாதிக்கும். மேலும் உடலைக் கெடுப்பது நாம், சரிசெய்ய வேண்டியதும் நாம், அதை விடுத்து கடவுள் என்று ஒருவரிடம் கேட்டால் எப்படி?

கோயில்களில் நடக்கிறேன் என்று சொல்லி “கால்வலி” வாங்கி வருவோர் ஏராளம். இறைவன் யாரையும் நடக்க சொல்லவில்லை. ஏன் எங்கோ ஒரு ஊருக்குப் போய் மலையை சுற்றுகிறீர்கள், உங்கள் இல்லத்திலிருந்தே நடந்தே செல்லலாமே.

வாசியோகப் பயிற்சிகளில் சேர்ந்து ஒருவருடம் ஆகாத நிலையில் மலைகளில் ஏறுவது, பாதயாத்திரை செல்வது போன்ற செயல்களால் வாசியோகப் பயிற்சியாளர்களின் சுவாசத்தில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. காரணம் கழிவுகள் முழுமையாய் வெளியேறியிருக்காது. இதனால் உடலில் ஏதாவது உபாதைகள் ஏற்பட்டால், தவறு தங்களுடையது என்பதை மறந்து விடுவீர்கள். உங்களைச் சுற்றியுள்ள யாருக்கும் சிவகுரு சிவசித்தனின் விதிமுறைகள் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டா? என்றால் தெரியாது, அத்தகைய நிலையில் உங்கள் உடல் உபாதைக்கு, சிவகுருவையோ அல்லது வாசியோகப் பயிற்சிகளையோ, அல்லது வாசியோக விதிமுறைகளையோ எவரேனும் தவறாக பேசினால் அந்த பாவமும் உங்களையே சேரும். மறவாதீர்.

கோயில்களுக்கு செல்கிறேன் என்று விரதம் இருந்து உடலில் தேவையில்லாத கழிவை சேர்த்து வைக்கின்றீர். அவை வாய்வாக உடல்முழுதும் நிற்கையில், சில நாட்கள் கழித்து விரதம் முடிந்தது என்று ஒரே அடியாக உணவு உண்பீர்கள்.

இதன் விளைவு தான் உங்களுக்கே தெரியாத மிகப் பெரிய வியாதிகள் என்று நீங்கள் சொல்லும் மாரடைப்பு போன்றவை வரக் காரணம்.

வாசியோகப் பயிற்சிகள் செய்வோர் இனியேனும் இந்த தவறுகள் செய்யாமல் இருப்பது நலம். கழிவுகள் நீக்கப் படாமல் இருப்போரின் உணர்வுகளில் எண்ணச்சிதைவுகள் அதிகமாக ஏற்பட காரணம் இருக்கின்றது. வாய்ப்பும் இருகின்றது.

மேலும் கோயில்களுக்கு வரும் மக்கள் யாவரும், அதிகமான மனவேதனைகள், வன்மமான எண்ணங்கள், தங்கள் எண்ணம் நிறைவேற வேண்டும் என்ற ஆழமான சிந்தனையில் அங்குள்ள மாயையின் செயல் தங்களுள் ஒளிந்திருப்பது தெரியாமல் அலைவர். இதுவே உண்மை.

 

Leave a Reply