முக்கிய தகவல்

எச்சரிக்கை! எச்சரிக்கை!!

     மதுரை சிந்தாமணி, ஸ்ரீ வில்வம் யோகா மையத்தில் சிவகுரு சிவசித்தனின் வாசியோகம் கற்றுத்தரப்படுகிறது. வேறு எங்கும் கிளைகள் கிடையாது. மையத்தின் செயல்பாடுகள் அனைத்தும் உடனுக்குடன் இணையதளத்தில் பதிவு செய்யப்படுகிறது.

இந்த தகவலை ஒரு சில, மாற்றுமுறை உடல்நல பயிற்சிகளை ஒவ்வொரு ஊராக முகாம்கள் நடத்திவரும் அவர்களின் செயலானது, தன்னிடம் தீர்வும், நிவாரணமும் கேட்டு வரும் நபர்களை தனது சிந்தனைக்கு எட்டாத விஷயங்களுக்கு மதுரை, ஸ்ரீ வில்வம் யோகா மையத்திற்கு சென்று, சிவசித்தனின் வாசியோகம் பயின்று கொள் என்று பரிந்துரையும் செய்து, இணையதளத்தில் உள்ள தொலைபேசி, அலைபேசி எண்களை வழங்கி வருகிறார். இப்படிப்பட்ட செயல்களை செய்யும் அனைத்து நபர்களுக்கும் சிவகுரு சிவசித்தனின் எச்சரிக்கை! எச்சரிக்கை!!

     வாசியோகப்பயிற்சிகளை தினமும் செய்து கழிவுகள் வெளியேறி புனிதம் நிறைந்த எண்ணத்துடன், தாங்கள் பெற்ற இன்பமும் (இன்பம் பெற்றால் மட்டுமே) வேதனைகள் மறைந்ததையும், தன்னிடம் கேட்டு வரும் நபர்களுக்கு பரிந்துரை செய்தால் மட்டுமே இருவருக்குமே நன்மை பயக்கும். ஆனால், அதை விடுத்து, வாசியோகம் பற்றி எதுவுமே தெரியாமல், அதன் மகிமையின் மகத்துவம் புரியாமல், ஏதோ கடைச்சரக்குப் போல, போய் மதுரையில் பெற்றுக் கொள் என்று பரிந்துரைக்கும். உமது செயலை ஏற்று, பலவித எதிர்பார்ப்புகளுடன் வரும் அந்த ஆத்மா சிவசித்தனின் வாசியோக விதிமுறைகளை கேள்வியுற்று கடைபிடிக்க இயலாமல், மேலும் பரிதவிப்பில் ஆழ்கிறது.

001

     எனவே, பரிதவிப்பில் இருக்கும் மானுடர்க்கு நன்மை செய்கிறோம் என்ற உமது செயலின் அறியாமையின் விளைவு உன்னைச் சூழ்ந்து நீயும் துன்பப்படுவாய். ஆகவே, எந்த ஒரு செயலையும், நாம் அனுபவித்து உணர்ந்து அதன் பாதிப்புகளை களைந்திடும் வழியில் அனுபவித்து பலன் பெற்ற பின்னரே மற்றவருக்கு பரிந்துரை செய்தால், அதனால் அவர்கள் அடையும் ஆனந்தமும், நல்வினையும், முழுமையாக நம்மைச் சேரும்.

     இங்ஙனம் அரிதாக கிடைத்த மானுடப் பிறப்பில்  தானாக செய்யும் தவறுகளின் விடையாக உடல் பிணி மட்டுமே அவனை சிரமப்படுத்துகிறது. மற்ற வகையில் உருவாக்கிடும் செயல்களை தனது புகழுக்கு அடித்தளமாகப் பயன்படுத்திக் கொள்கிறான்.

     இன்னல்களை மட்டும் பிறர் அஞ்சும் வண்ணம் மிகைப்படுத்திக் கூறி தன் ஆளுமையை நடத்திக்கொள்ள களமாக்கிக் கொண்டான். அந்த வகையில் இன்றைய மருத்துவ, விஞ்ஞான, இயந்திர, அவசரகால நடைமுறை வாழ்வில் சிந்திக்கக்கூட நேரமின்றி, இலக்கின்றி இயந்திரமாக இயங்கும் மானுடன் இது போன்ற தகவல்களை முழுமையாக அறிந்துக் கொள்ள முடியாமல் அரைகுறையாக கேள்விப்பட்டு அதையே உண்மையென்று நம்பிவிடுகிறான். அதுபற்றிக் காண்போம் :

      அதிஉன்னதமானதே சிவசித்தனின் வாசியோகம். இந்த வாசியோகம் செய்வது வாழ்நாள் முழுவதுமான கலையாகும். உடல் வருத்தி, உண்டி சுருக்கி, உன்னதம் உணரும் கலை, உண்மையின் முழுவடிவமான கலை ஆகும். “தானாக உள்ளார்ந்து உண்மையாய் இயங்கினால் தானாகவே வரும். இல்லையேல் தினித்தாலும் வராது”

     உண்மையானது மலைபோல் வலிமை வாய்ந்தது. பொய்மையானது தூசிபோல இலகுவானது. இதனால் உண்மையை நாடிச் செல்ல கரடுமுரடாக சிரமப்பட்டு அடைய வேண்டும். அடைந்தபின்பு மலை வாசஸ்தலத்தின் சுகம் போன்ற நிலையை பெற்று என்றும் இன்புறலாம்.

     ஆனால், தூசியானது எடையற்றது. சற்றே ஓங்கி காற்றடித்தாலும் எங்கும் பரவிவிடும். ஒரு கட்டத்தில் அடங்கி அமைதியாக அழிந்துவிடும். அப்படி அடங்காது சுழன்று செயல்படும் இத்தகைய தூசிகளின் செயலே, இன்றைய உலகை ஆட்டிப் படைக்கிறது. அதுவே உண்மை என எண்ணி, அறியா மானுடன் அல்லல் உருகிறான்.

உண்மையினை கண்டு மலைக்கிறான். என்றோ, ஏதோ ஒரு (சோம்பேறி, கோமாளி, எதோ ஒரு) இயலாத நபர் வாசியோகம் செய்வதால் இறப்பு வந்துவிடும் என்று கூறியதை இந்த மானுடன் சிக்கெனப் பற்றிபிடித்துக் கொண்டு, தான் மட்டும் சாகாவரம் பெற்ற சீரஞ்சீவியாக இருக்கப் போவது போல, மற்ற நபர்களை குழப்பிவிடும் செயலை செய்துவிட்டு, அவனும் மாண்டு போனதே உண்மை. ஆனால், இந்த மானுடன் இதை அறிந்தாலும் ஏனோ, ஏற்க மறுத்து ஒதுங்கியே வாழ்ந்து வருகிறான்.

     மதுரையில், சிந்தாமணியில் ஸ்ரீ வில்வம் யோகா மையத்தில், சிவகுரு சிவசித்தனின் வாசியோகம் பயில 14 வயது என்று இலக்கு நிர்ணயத்து 90 வயது ஆன நபர்களுக்கும் வாசியோகப் பயிற்சிகள் வழங்கி தங்கள், உணவால் பழக்கத்தால் உருவாக்கிக் கொண்ட உடல் உபாதைகளை எந்த ஒரு மருந்தின் துணையின்றி வாசியோகப்பயிற்சிகளை தினமும் ஒரு வேளை செய்ய வைத்து நலமடையச் செய்து வருகிறார். தங்களின் அன்றாட வாழ்வில் வாசியோகம் செய்யாது பிணி கொண்ட மானுடனே பல எண்ணிக்கையில் மாண்டு போவதை கண் கூடாக காண்கிறோம்.

     அதே வேலையில் மரணத்தை வென்றவர்கள் நாங்கள் என்று எந்த தகவலையும் எதிர்மறையாக பரப்புரை செய்யாமல், என்றோ ஒரு நாள் நிச்சயமாக வர இருக்கும் மரணத்தை ஆரோக்கியமாக சந்திக்க அனுதினமும் வாசியோகம் இறை உணர்வை உணர்ந்து, அந்த ஒரு நாளுக்காக (மரணம் ஏற்படும் நாளை) எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.

     எனவே, உண்மை அறியா மானுடனே, உன்னால் செயல்பட முடியாத ஒரு காரணத்தால் மற்றவரின் முயற்சியைத் தடுப்பது மகாபாவம் என்று உணர்ந்து ஒதுங்கிச் செல். இல்லையேல் முன் சொன்ன இந்த மானுடப்பிறப்பிலிருந்து விலகி, எதுவாகவோ, பிறந்து எதையும் அறியாமல் இப்பிறவி போல எவருக்கும், எதற்கும் பயனில்லாமலே போவதை அறிந்துக் கொள்.

     எனவே, இதிலிருந்து மீள சிவகுரு சிவசித்தனின் வாசியோகம் ஒன்றே வழி.Shree Vilvam Yoga Centre

Leave a Reply

  • சிவசித்தனின் கூற்று