சிவசித்தனின் கூற்று

சிவசித்தனின் கூற்று :

 1. உண்மையாக இல்லை என்பது :

வாசியோக பயிற்சியில் உணவு விதிமுறைகளும், பயிற்சிகளும் தினமும் விடாமல் பின்பற்றுவது கடினமே ஆயினும் உண்மையாகக் கடைபிடித்தால் தேக நலன் பெறுவது உறுதி என்பதை வாசியோகப் பயிற்சியாளர்களின் அனுபவமே சான்று. இருப்பினும் உணவு விதிமுறைகளில் மற்ற விதிமுறைகளை கடைபிடிக்கத் தவறும் பொது, பயிற்சியாளர்கள் உண்மையைக் கூறத் தவறுவதும், தயங்குவதும் கண்கூடாக காண முடிகிறது. தமது தேக நலனுக்காக வரையறுக்கப்பட்ட விதிமுறைகளை மீறுவதும், அதன் உண்மையினைக் கூட சிவகுரு சிவசித்தனிடம் கூறி தீர்வு பெறவும் தயங்குகின்றனர். தமது தேக நலனில் அக்கறை கொண்டுள்ள சிவகுருவிடம் கூட மக்கள் உண்மையாக இருப்பதும், கடின உண்மையே பேசுவதும் இல்லை. என்பதும் வாசியோகப் பயிற்சியாளர்களின் அனுபவத்தில் இருந்து கண்டுகொள்ள முடிகிறது.

 2. இயற்கையின் பாதுகாப்பு :

வாசியோகப் பயிற்சியினை தினமும் தவறாமல் செய்யும் பயிற்சியாளர்களுக்கு, விதிமுறைகளை உண்மையாகப் பின்பற்றுபவர்களுக்கு இயற்கையோடு, இயைந்த வாழ்வினை ஏற்றுக் கொண்டவர்களுக்கு மழை, பணி, வெயில், குளிர் என இயற்கை எந்த பாதிப்பும் செய்வதில்லை. இயற்கையே தேகத்தின் பாதுகாக்கவும் செய்கிறது. மழைக் காலங்களில் கூட தினமும் மழையில் நினைந்து மையத்தில் பயிற்சி செய்யும் பயிற்சியாளர்கள் இதற்கு சான்று. ஒன்றிரண்டு வருடம் தொடர்ந்து பயிற்சி செய்யும் பயிற்சியாளர்களுக்கே இயற்கை அன்னை பாதுகாப்பளிக்கும் பொது, சிறுவயது, முதலே வாசியினை உணர்ந்து தொடர்ந்து பயிற்சி செய்துவரும் சிவசித்தனுக்கு இயற்கை பாதுகாப்பதில் வியப்பேதும் இல்லையே!

 3. வாசியோகக் கலை தனிநபர் கலையே :

சிவகுரு சிவசித்தன் வாசியோகக் கலையினை தானாய் உணர்ந்து கற்றுத் தருவதாக கூறுகிறார். வாசியோகப் பயிற்சியில் சேறுபவர்களை தனி தனியாக ‘நாடி’ பார்த்து, அவரது உடல் தன்மைக்கேற்ப, நாடிகளின் செயல் குறைபாடுகளைக் தானாய் கண்டறிந்து தனி தனியே பயிற்சிகள் அளிக்கிறார் சிவசித்தன். வாசியோகப் பயிற்சியாளர்கள் ஒவ்வொருவரும் இதை அறிவர். பயிற்சிகள் மூலம் ஒவ்வொருவர் பெரும் உணர்வுகளும் தனித் தனியே, இதையும் ஒவ்வொரு பயிற்சியாளரும் நன்கு அறிவீர், வாசியோகப் பயிற்சியாளர்களின் கூட்டத்தில் பயிற்சியாளர்கள் தமது அனுபவங்களை பகிர்வதன் மூலம் தமது உடலில் உள்ள நோய்கள் நீங்கி, உடல் ஆரோக்கியம் பெறுவதையும், மனதில் ஏற்படும் நல்ல மாற்றங்களையும் தானாய் உணர்கின்றனர். அதனை வீடியோவிலும் பதிவு செய்து வருகின்றனர் தாம் பெற்ற நலனை பிறருக்கும் சென்றடைய வேண்டும் எனும் நோக்கத்துடன்.

 4. ‘தானாய் உணர்ந்த கலை’:

சிவகுரு சிவசித்தன் வாசியோகக் கலையினை எந்த ஒரு புத்தகம் மூலமாகவோ, வேறு எந்த தனிநபரிடமோ கற்றுக் கொள்ளவில்லை என்று கூறுகிறார். ஒவ்வொருவருக்கும் தனிதனி பயிற்சிகள் அளிப்பதை பார்க்கும்போது எந்த ஒரு புத்தகத்திலும் இல்லாத ஒரு நிலை பயிற்சியும், பயிற்சி கற்றுக் கொடுக்கும்போது அமர்ந்து செய்யும் நிலை மாறுபடுவதும், ஒவ்வொருவரும் உணர்ந்து சொல்லும் அனுபவங்களும் வெவ்வேறு ஆகவும் உள்ளது.

சிவசிதனின் கூற்று >>>>>>>

Leave a Reply